கமலக்கன்னியம்மன் கோவில் தேர் கட்டும் பணி துவக்கம்
ADDED :3928 days ago
செஞ்சி: செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலுக்கான தேர்கட்டும் பணியை எம்.எல்.ஏ., கணேஷ்குமார் பார்வையிட்டார். செஞ்சி கோட்டை கமலக்கன்னியம்மன், காளியம்மன், பீரங்கிமேடு மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 10 நாள் திருவிழா நடக்கிறது. இதில் முக்கிய விழாவாக திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கும். இதற்காக 80 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் கட்டும் பணி 9 மாதமாக நடந்து வருகிறது. இப்பணிகளை எம்.எல்.ஏ., கணேஷ்குமார் பார்வையிட்டார். தேர்கட்டுவதற்கு தேவையான கூடுதல் மரம் மற்றும் நிதியை வழங்க உறுதியளித்தார். கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர் காசிநாதன், பா.ம.க., நகர செயலாளர் ரகுபதி, நிர்வாகிகள் பெருமாள் மற்றும் கமலக்கன்னியம்மன் திருவிழா உபயதாரர்கள் உடன் இருந்தனர்.