உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனந்தீஸ்வரர் கோவில் குளம் தூர் வாரும் பணி!

அனந்தீஸ்வரர் கோவில் குளம் தூர் வாரும் பணி!

சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்த குளம் தூர் வாரும் பணி நடக்கிறது. சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் 73 லட்சம் ரூபாய் மதிப்பில்  திருப்பணி நடக்கிறது. கோவில் ராஜகோபுரம், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட  அனைத்து சீரமைப்பு பணிகள் நடந்தது. இன்னும் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி கும்பாபிஷேகம் என திருப்பணிக் குழு அறிவித்துள்ளது. இதற்கான பணிகளை இந்து அறநிலையத் துறையும், திருப்பணிக் குழுவும் செய்து வருகின்றன. இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்தகுளம் பல ஆண்டுகளுக்கு மேல் தூர் வாரப்படாமல் இருந்ததால், தற்போது ஆட்கள் மூலம் தூர்  வாரும் பணி நடக்கிறது. குளத்தில் 4 அடி ஆழம் அளவில் படிந்துள்ள சகதிகள் அப்புறப்படுத்தும் பணி நடந்தது. தொடர்ந்து தீர்த்தக் குளம்  சீரமைக்கப்பட்டு புதிய தண்ணீர் விடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !