உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் ஜன.,16ல் 108 கோபூஜை!

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் ஜன.,16ல் 108 கோபூஜை!

தஞ்சாவூர்: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில், மஹர சங்கராந்தி பெருவிழா வரும், 15, 16ம் தேதிகளில் நடக்கிறது. தஞ்சை பெரியநாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில், மஹா நந்தியம் பெருமானுக்கு, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மஹர சங்கராந்தி பெருவிழா, இரண்டு நாட்கள் நடக்கும்.

இந்த ஆண்டு சங்கராந்தி பெருவிழா வரும், 15ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை, 6.30 மணி முதல், மஹா நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடக்கிறது. 16ம் தேதி காலை, 8.30 மணி முதல் மஹா நந்தீஸ்வரருக்கு பழங்கள், காய்கறிகள், மலர்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து, சோடச உபசாரத்துடன் மஹா தீபாராதனையும், 108 கோ-பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, அரண்மனை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !