அஸ்வரூபம் கணபதிக்கு சந்தன காப்பு அலங்காரம்!
ADDED :4177 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அமராவதி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. விழுப்புரம் காமராஜர் வீதி, அமராவதி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை யொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை அஸ்வரூப கணபதி, சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.