உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கல் பண்டிகைக்காக மண்பானை தயார்!

பொங்கல் பண்டிகைக்காக மண்பானை தயார்!

காஞ்சிபுரம்: பொங்கல் பண்டிகைக்காக மண்பானை தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. தமிழர்களின் பண்டிகைகளில், பொங்கல் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில், விவசாயிகள் புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக, மண் பானையை அதிகம் பேர் விரும்பி வாங்குவர். பொங்கலை முன்னிட்டு, காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணி, தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.குடும்பத்திற்கு தகுந்தாற்போல், ஒரு படி, முக்கால்படி, அரைப்படி, கால்படி என, நான்கு வகைகளில் பொங்கல் பானை செய்யப்படுகின்றன. இதற்காக, 30, 25, 20, 15 ரூபாய் என்ற விலைக்கு மொத்தமாக விலைக்கு கொடுப்பர். இதை மொத்தமாக வாங்கும் வியாபாரி கள், 60, 50, 40, 30 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்வர். இதுகுறித்து, தொழிலாளர் முனுசாமி கூறுகையில், ”எங்கள் குல தொழிலே இதுதான். இதற்கு, மண் தேடி கொண்டு வந்து பானைகளை செய்து வருகிறோம். ஏரிகளில் சவுடு மணல் எடுத்தால், போலீசார் தடுக்கின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !