அழகுராஜபெருமாள் கோவில் திருப்பணி மீண்டும் துவக்கம்
அந்தியூர்: அந்தியூரில் புகழ்பெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் பின்புறம், செல்லீஸ்வரர் கோவில் வகையராவை சேர்ந்த ஸ்ரீஅழகுராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில் புனரமைக்க முடிவு செய்து, புதிய கட்டிட திருப்பணி, கடந்த, 2011 ஃபிப்ரவரி, பத்தாம் தேதி துவங்கில், பல்வேறு காரணங்களால், பணிகள் தொடர முடியாமல் போனது. கடந்த, நான்கு ஆண்டுகளாக, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, அவ்வளாகத்திலேயே பெருமாளுக்கு குடிசை அமைத்து, பூஜைகள் நடந்தது.தற்போது, மீண்டும் திருப்பணிகள், கடந்த மாதம் துவக்கி, இயந்திரம் உதவியுடன், தீவிரமாக நடந்து வருகிறது. இதுபற்றி, அந்தியூர் சண்முகம் கூறியதாவது:அறநிலையத்துறை மற்றும் அந்தியூர் எம்.எல்.ஏ., ரமணீதரன் முயற்சியால், மீண்டும் திருப்பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள், திருப்பணிகள் முடிவடைந்து, கும்பாபிஷேகம் நடைபெறும். அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.