கெங்கவல்லியில் ஸ்வாமி ஊர்வலம்
ADDED :4024 days ago
கெங்கவல்லி: கெங்கவல்லியில், திருமுருக பக்தர்கள் தெய்வீகப் பேரவையின் சார்பில், ஸ்வாமி ஊர்வலம் நடந்தது.கெங்கவல்லி, பேரூராட்சி இரண்டாவது வார்டில், பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலிலுள்ள பாலசுப்ரமணியருக்கு, திருமுருக பக்தர்கள் சார்பில், ஆண்டுதோறும் விழா கொண்டாடுவதை, வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று, முன்தினம் இரவு 7.30 மணியளவில், சக்தி அழைத்தல் நடந்து, பாலசுப்ரமணியர் அலங்கரிக்கப்பட்டு, வீதி உலா நடந்தது. பக்தர்கள் சார்பில், பால் குட ஊர்வலம், 108 திருவிளக்கு பூஜை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து, ஸ்வாமி வழிபாடு செய்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.