கஜவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :3946 days ago
சேலம்: சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம் வீரகனூரில் அமைந்துள்ள கஜவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை (ஜன.,11) காலை, 6 மணிக்கு மேல், 9 மணிக்குள், கஜவரதாராஜ பெருமாளுக்கும், கோதை பிராட்டி ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. இத்திருமண நிகழ்ச்சியில், பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.மேலும், இத்திருமணத்தில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் திருக்கல்யாண உத்சவத்தில் கலந்து கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் அமையும் என, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். திருமண விழாவிற்கு பிறகு அன்னதானம் நடக்கவுள்ளது.