தியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனையுடன் நிறைவு!
ADDED :4019 days ago
தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜர், 168வது ஆராதனை விழாவில், ஆயிரக்கணகான இசைக் கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தியாகராஜர், 168வது ஆராதனை விழாவில் தியாராஜர் சிலைக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின் உஞ்ச விருத்தி பஜனை ஊர்வலம் நடந்தது. இதில், தியாகராஜர் திருஉருவச் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விழாவில், ஆயிரக்கணகான இசைக் கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செய்தனர். விழாவில், தியாகராஜர் ராஜ அலங்கராத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.