உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதுகாப்பற்ற சிவலிங்கம், நந்தி சிலைகள்!

பாதுகாப்பற்ற சிவலிங்கம், நந்தி சிலைகள்!

உத்திரமேரூர்: அரசாணிமங்கலத்தில் பாதுகாப்பின்றி உள்ள சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகளை ஆலயம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என,   அப்பகுதிவாசிகள் எதிர்பார்த்து வருகின்றனர். உத்திரமேரூர் அடுத்துள்ளது. அரசாணிமங்கலம் கிராமம். இக்கிராமத்தில், துர்க்கையம்மன் கோவில்  தெருவில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, சிவலிங்கம், நந்தி பகவான் மற்றும் ஸ்ரீபீடம் ஆகிய சிலைகள், கடந்த பல ஆண்டுகளாக இரு க்கின்றன. பண்டிகை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில், இந்த சிலைகள் உள்ள பகுதியில், இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் தீபம் ஏற்றி பிரார்த்தனை  செய்து வருகின்றனர். மேலும், இங்கு வழிபாடு மேற்கொண்டால் வேண்டுதல் நிறைவேறுவதாக இப்பகுதிவாசிகள் நம்புகின்றனர்.

இதுகுறித்து, இப்பகுதிவாசிகள் கூறுகையில், கடந்த காலத்தில் இப்பகுதியில், சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்பாக,  பராமரிப்பின்றி அக்கோவில் இடிந்து விட்டதால், கோவிலில் இருந்த சுவாமி சிலைகளை எங்களது முன்னோர்கள் கொண்டு வந்து, இப்பகுதியில்  வைத்து, வழிபட்டு வந்தனர். நாங்களும் தொடர்ந்து இங்கு வந்து வழிபட்டு வருகிறோம். இப்பகுதியில் புதிய ஆலயம் அமைத்து, இந்த சிலைகளை  பிரதிஷ்டை செய்து, பாதுகாக்க நீண்ட நாட்களாக ஆலோசித்து வருகிறோம்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !