கோட்டை அழகிரிநாதர் கோவிலில் கூடாரவல்லி திருநாள்!
ADDED :3929 days ago
சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ரங்கனை மணந்த திருநாளான ‘கூடாரவல்லி’ உற்சவம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் ஆண்டாள் சிறப்பு தங்க கவசத்தில் கையில் ஸ்ரீவில்லிப்புத்துõரில் இருந்து வரவழைக்கப்பட்ட கிளியை பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.