உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி, ஈஸ்வரன் கோயிலில் "காளபைரவ அஷ்டமி விழா!

மீனாட்சி, ஈஸ்வரன் கோயிலில் "காளபைரவ அஷ்டமி விழா!

பரமக்குடி : பரமக்குடி மீனாட்சி, ஈஸ்வரன் கோயில்களில் சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும்படி உணவருளிய லீலையான, காளபைரவ அஷ்டமி விழா நடந்தது. பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நடந்த விழாவில், அதிகாலை 4 மணிக்கு மூலவர் சந்திரசேகர சுவாமிக்கும், விசாலாட்சி அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10.30 க்கு சந்திரசேகரசுவாமி பிரியா விடையுடனும், விசாலாட்சி அம்மன் தனித்தனியாகவும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தனர். மாலை 5 மணிக்கு திருத்தேர் கோயிலை அடைந்தது. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில்பஞ்சமூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9.30 க்கு சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியும் தனித்தனி தேரில் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்தனர். தேர் பகல் 12 மணிக்கு கோயிலை அடைந்தது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !