குழந்தை ஏசு ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி
ADDED :4084 days ago
புதுச்சேரி: கிருஷ்ணா நகரில் உள்ள குழந்தை ஏசு ஆலய பெருவிழாவை முன்னிட்டு, ஆடம்பர தேர்பவனி நடந்தது. காமராஜர் நகர் தொகுதி, கிருஷ்ணா நகரிலுள்ள குழந்தை ஏசு ஆலய பெரு விழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி, மாலை 6.00 மணியளவில், பேராயர் ஆனந்தராயர் தலைமையில் திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு பின் ஆடம்பர தேர்பவனி நடந்தது. இதில், எதிர்கட்சித்தலைவர் வைத்திலிங்கம், வட்டார காங்., செயலாளர் ஜான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, பங்கு தந்தை தோமினிக் ரொசாரியோ மற்றும் ஜெயந்த் ராயன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.