நாமபுரீஸ்வரர் கோவிலில் சூரிய ஒளி தரிசனம்
ADDED :3939 days ago
ஆலங்குடி:ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோவிலில், மூலவர் மீது சூரிய ஒளி பட்டு, அபிஷேகம் செய்வது போன்ற சம்பவத்தை, பொதுமக்கள் தரிசித்தனர். இரண்டாவது குருஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி சிவன் கோவிலில், லிங்க வடிவில் எழுந்தருளிய நாமபுரீஸ்வரர் மீது மார்கழி மாதம் நேரடியாக சூரியஒளி படும். நேற்று காலை, கோபுர வாசல் வழியாக பாய்ந்த சூரிய ஒளி, நேரடியாக நாமபுரீஸ்வர் மீது அபிஷேகம் செய்வது போல விழுந்தது. இதனால், ஜொலித்த மூலவரை ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் வணங்கினர்.