புதுச்சேரி கோமாதா கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :3950 days ago
புதுச்சேரி: கருவடிக்குப்பத்தில் உள்ள கோமாதா கோவி லில், பசுக்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.கருவடிக்குப்பம், ஓம் சக்தி நகரில் கோமாதா கோவில் அமைந்துள்ளது. மாட்டு பொங்கலையொட்டி நேற்று மாலை பசுக்களுக்கு காய்கறிகள், பழங்கள், அகத்திக்கீரை உள்ளிட்ட உணவுகளை அளித்து, உலக நன்மை வேண்டி, சிறப்பு வழிபாடு நடந்தது.முன்னதாக, பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் ஓம்சக்தி சேகர், வைத்தியநாதன், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஸ்ரீசாய் சங்கர பக்த சபா, கோ சம்ரக்ஷனா எஜூகேஷனல் சேவா டிரஸ்ட், புதுச்சேரி பிராமண சமூக நலச் சங்க தலைவர் கல்யாணம், அருணாச்சலம், ராஜா சாஸ்திரிகள், சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.