சிதம்பரத்தில் வைகாசி விசாக உற்சவம்
ADDED :5230 days ago
சிதம்பரம் : சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக உற்சவத்தையொட்டி சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. சிதம்பரம் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலில் வைகாசி விசாக உற்சவத்தையொட்டி உற்சவ மூர்த்தியான பெருமாள் (சித்திரகூடத்துள்ளான்) தங்க கருட சேவையில் வீதியுலா நடந்தது. மாலை நாலாயிர திவ்ய பிரபந்த சேவையும் சாற்று முறையும் நடந்தது. இரவு சேஷ வாகனத்தில் உபய நாச்சியாருடன் சித்திரக்கூடத்துள்ளான், நம்மாழ்வார் வீதியுலா நடந்தது.