கோபத்தை சம்பாதிக்காதீர்!
ADDED :4316 days ago
சந்திரன் முழுமையாக தன்16 கலைகளுடன் இருக்கும் நாள் பவுர்ணமி. அதன் கலைகள் படிப்படியாகக் குறைந்து ஒரே ஒரு கலையுடன் இருக்கும் நாள் அமாவாசை. இந்நாளில் பிதுர்லோகத்தில் வாழும் முன்னோர்கள் பசி, தாகத்தால் சிரமப்படுவதாக சாஸ்திரம் கூறுகிறது.அந்நாளில் பிள்ளைகள்தர்ப்பணத்தில் கொடுக்கும்எள் கலந்த தண்ணீரால்தாகம் நீங்கி சந்தோஷம்அடைகிறார்கள். நிர்ணய ஸிந்து என்னும் நுõலிலுள்ள 327வதுஸ்லோகத்தில், மறைந்த பெற்றோர் அமாவாசை நாளில் பிள்ளைகளின் வீட்டு வாசலில் நின்று, எள் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், தர்ப்பணம் செய்யாவிட்டால் ஏமாற்றமடைந்து கோபம் கொள்வதாகவும் சொல்லப்பட்டுள்ளது.