உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா

மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை, 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மூலவர், உற்சவருக்கு காப்பு கட்டும் பூஜை நடந்தது. சிவாச்சாரியர்கள் பக்தர்களின் கைகளில் மஞ்சள்கொம்பு, மஞ்சள் துணியால் காப்பு கட்டினர். கோயிலில் வரும் 15ல் மாலை சக்தி வேல் வழங்கும் வைபவம் நடக்கும். அதை தொடர்ந்து சூரசம்ஹாரம் விழாவும், பின்பு சுவாமி திருவீதி உலாவும் நடக்கும். 16ம் தேதி காலை, சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 


*காரமடை அரங்கநாதர் கோயிலுக்கு உட்பட்ட, நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் உள்ள ஆறுமுக வேலவர் சன்னதியில், கந்த சஷ்டி துவக்க விழா நடந்தது. காலையில் ஆறுமுக வேலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.


* சிறுமுகை பழத்தோட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயிலில், முருக கடவுளுக்கு பால் அபிஷேகம் முடிந்த பின், மகா கணபதி வேள்வி நடந்தது. மூலவர், உற்சவருக்கு காப்பு கட்டும் வைபவம் நடந்தது.


சூலூர்: விராலிக்காடு ஸ்ரீ சென்னியாண்டவர் கோயில், பொன்னாண்டாம்பாளையம், காங்கயம்பாளையம் ஸ்ரீ சென்னியாண்டவர் கோயில், கண்ணம்பாளையம், கோவை பழனி ஆண்டவர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது. விராலிக்காடு ஸ்ரீ சென்னியாண்டவருக்கு அபிஷேக, அலங்கார பூஜை முடிந்தவுடன், சுவாமிக்கு காப்பு அணிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர். அரோகரா கோஷம் முழங்க வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !