உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கோவில்களில் கந்த சஷ்டி விரதம்; வரும் 15ல் சூரசம்ஹாரம்

பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கோவில்களில் கந்த சஷ்டி விரதம்; வரும் 15ல் சூரசம்ஹாரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை நேற்று துவக்கினர்.


பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹார திருவிழா நேற்றுமுன்தினம் மாலை, 5:30 மணிக்கு, அனுக்ஞை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை கந்தசஷ்டி உற்வசம் காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.


விழாவையொட்டி பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகப்பெருமானுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் விரதம் துவங்க கைகளில் காப்பு கட்டிக்கொண்டனர். அதன்பின், உற்சவ மூர்த்தியான வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். நேற்று முதல், 14ம் தேதி வரை தினமும் நான்கு கால அபிேஷக ஆராதனை நடக்கிறது.14ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும், 15ம் தேதி மாலை, 4:30 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. வரும், 16ம் தேதி காலை, 7:00 மணிக்கு மஹா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 17ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.


* பொள்ளாச்சி அருகே, குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், 5ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று காலை, 5:00 மணிக்கு கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, கணபதி வேள்வி, அபிேஷகம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.


இன்று முதல், 15ம் தேதி காலை, 6:00 மணிக்கு கணபதி வேள்வி, காலை, 7:00 மணிக்கு அபிேஷகம், காலை, 8:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.14ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மாரியம்மனிடம், முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும்; 15ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 16ம் தேதி காலை, திருக்கல்யாணம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, மதியம், அன்னதானம், மாலையில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.


வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 14ம் ஆண்டு கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று காலை, கணபதி ேஹாமம், சிறப்பு அபிேஷக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, கொடிமரத்திற்கு அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டு திருக்கொடி ஏற்றப்பட்டது. அதன்பின், கோவில் வளாகத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு மலர் அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு சஷ்டி விரதத்தை துவங்கினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், நாள் தோறும் காலை, 7:00 மணிக்கு உற்சவருக்கு புஷ்பாபிேஷகம், அலங்கார வழிபாடு, மாலை, 7:00 மணிக்கு மூலவர் சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.வரும், 15ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்கிறது. 16ம் தேதி காலை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணமும், மதியம் அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கந்தசஷ்டி திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !