திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா இரண்டாம் நாள்: தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் உலா
திருச்செந்துார்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா இரண்டாவது நாள் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது கந்தசஷ்டி திருவிழா இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை ஆகசாலை பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் இரண்டாவது நாள் இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகூதி தீபாரதனை நடைபெற்றது. தை தொடர்ந்து 10 மணிக்கு யாகசாலையில் ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் சென்றடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.