உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா விமரிசை

வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா விமரிசை

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது.


தொடர்ந்து, வெற்றிலை, சாமந்தி, செண்பகம் மலர் மாலைகளுடன், வெற்றிலை மலர் கீரடம் அணிந்து, ராஜ அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். அதேபோல், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு, காலை சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, சிவப்பு பட்டாடை உடுத்தி, சிவப்பு ரோஜா மாலை அணிந்து, சிவப்புசாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 14ம் தேதி இரவு வல்லம் கிராமத்தில் உள்ள சடையீஸ்வரர் கோவிலில் வேல் வாங்கும் விழா, 15ம் தேதி சூரசம்ஹாரம், 16ம் தேதி திருக்கல்யாண உத்சவம், சுவாமி வீதி உலா உள்ளிட்டவை நடைபெற உள்ளன.


குமரக்கோட்டம்


காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா வை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், முருகனுக்கு நெய் மற்றும் நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.


வலம் வர தடை


வரும் 29ம் தேதி குமரக்கோட்டம் முருகன் கோவிலில், மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதால், பக்தர்கள் கோவிலின் உட்பிரகாரத்தை வலம் வர, தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !