உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிகாட்டுகிறார் ராமர்!

வழிகாட்டுகிறார் ராமர்!

வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தின் 102வது சர்க்கத்தில் பிதுர்வழிபாட்டின் முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது. சித்ரகூடத்தில் தம்பி லட்சுமணன், சீதையுடன் ராமர் பர்ணசாலை அமைத்து தங்கியிருந்த காலத்தில் பரதன் சத்ருகனனுடன் வந்து தந்தை தசரதர் இறந்த செய்தியை தெரிவித்தார். தந்தை இறந்த பின்னும் தன் உயிர் நீங்காமல் இருக்கிறதே என்று ராமர் அழுது புலம்பினார். பின் சீதை, லட்சுமணருடன் மந்தாகினி நதிக்குச் சென்று தர்மசாஸ்திரப் படி பிதுர் கர்மாக்களை முறையாகச் செய்தார். இதன்மூலம் பெற்றோருக்கு பிதுர்கடன் செய்வது மிகவும் அவசியம் என நமக்கு எடுத்துக் காட்டுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !