தந்தையின் ஆசி கிடைக்க!
ADDED :4316 days ago
மகாபாரதத்தில் உள்ள அனுசாசன பர்வத்தில், பிதாமகர் பீஷ்மர் செய்த முன்னோர் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது. பீஷ்மர் தன் தந்தையான சந்தனு மகாராஜாவிற்கு கங்கைநதிக்கரையில் விசேஷ நாட்களில் தர்ப்பணம் கொடுத்து வந்தார். அப்போது, அவருடைய தாயான கங்காதேவி நேரில் வந்து மகனுக்கு உதவி செய்வாள். ஒருநாள் கனவில் தோன்றிய சந்தனு, மகனே பீஷ்மா! நீ செய்த சிராத்தத்தை ஏற்று மகிழ்ந்தேன். என்னுடைய ஆசிகள் என்றென்றும் உனக்கு உண்டு, என்று சொல்லி மறைந்தார். குருக்ஷேத்திரத்தில் பீஷ்மர் தர்மபுத்திரருக்கு தர்மோபதேசம் செய்யும் போது இதை கூறினார். மறைந்த தந்தையின் ஆசி கிடைக்க கண்டிப்பாக தை அமாவாசையன்று தர்ப்பணம் செய்து விடுங்கள்.