சலசல கேட்டா சந்தோஷம்!
சீர்காழி அருகிலுள்ள திருநாங்கூரைச் சுற்றியுள்ள திவ்யதேசங்கள் 11. திருநாங்கூர் திவ்யதேசங்கள்என்றே இதனைக் குறிப்பிடுவர். திருக்காவளம்பாடி,அரிமேய விண்ணகரம், வண்புருஷோத்தமம், செம்பொன்செய்கோயில், மணிமாடக்கோயில்,வைகுந்த விண்ணகரம், தேவனார்த்தொகை,தெற்றியம்பலம், திருமணிக்கூடம், வள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகியவை. தை அமாவாசைக்குமறுநாள் திருநாங்கூர் மணிமாடக்கோயில் நாராயணபெருமாள் சந்நிதியில், 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் திருமங்கையாழ்வாருக்காக எழுந்தருள்வர். ஆழ்வாரும், ஒவ்வொரு பெருமாள் மீதும் பாசுரம் பாடும் மங்களாசாசன வைபவம் நடக்கும். தை அமாவாசையன்று, திருநாங்கூர் வயல்வெளிகளில் நெற்பயிர் காற்றில் எழுப்பும் சலசல ஒலியைக் கேட்டு, பக்தர்கள் திருமங்கையாழ்வார், குமுதவல்லியாருடன் எழுந்தருளி விட்டதாக மகிழ்ச்சியடைவர். அன்று ஆழ்வாரின் பாதம் வயலில் படுவதாகவும், விளைச்சல் அதிகரிப்பதாகவும் இப்பகுதி விவசாயிகள் நம்புகின்றனர்.