பொங்கல் தேரோட்டம்!
ADDED :3883 days ago
மதுராந்தகம்: பொங்கல் பண்டிகையை ஒட்டி, தின்னலுார் போலாட்சியம்மன் கோவிலில் தேரோட்டம் நேற்று முன் தினம் கோலாகலமாக நடந்தது.மதுராந்தகம் அடுத்துள்ள தின்னலுார் கிராமத்தில் போலாட்சியம்மன் திருகோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தேர்த் திருவிழா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த 16ம் தேதி காலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு உறியடி நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு பால்குடம் எடுத்தல், பகல் 12:00 மணிக்கு காத்தவராயன் சுவாமி வீதியுலா, மாலை 3:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் பக்தர்களிடையே எழுந்தருளி வீதியுலா சென்றார். இவ்விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிப்பட்டனர்.