உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்சிறுவளூரில் கருட சேவை உற்சவம்!

தென்சிறுவளூரில் கருட சேவை உற்சவம்!

வானூர்: தென்சிறுவளூரில் ஜெகலீச அழகிய மணவாள பெருமாளுக்கு கருட சேவை உற்சவம் நடந்தது. வானூர் அடுத்த தென்சிறுவளூர் கிராமத்தில் ஜெகலீச அழகிய மணவாள பெருமாள் கருட சேவை நடந்தது. சுவாமி அலங்கரிக்கப்பட்டு, கோவிலில் இருந்து புறப்பட்டு, மந்தவெளியை அடைந்தார். அங்குள்ள மண்டபத்தில் பக்தர்களுக்கு கோவர்த்தனகிரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் தர்மகாத்தா ரங்கநாதன், அறங்காவலர்குழு தலைவர் சீனிவாசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !