உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு!

லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு!

திருவள்ளூர்: திருவள்ளூர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மண்டலாபிஷேகம், நிறைவு பெற்றது. திருவள்ளூர், லட்சுமிபுரம், கிருஷ்ணர் ÷ காவில்,  ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், கடந்த டிசம்பர் 1ம் தேதி  நடந்தது.  அதன் பின், 48 நாள்  மண்டலாபிஷேகம் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மண்டலாபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், மாலை 6:00  மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, பகவத் பிரார்த்தனை சங்கல்பம், மகா சாந்தி ஹோமம் நடந்தது. இரவு  7:00  மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத  லட்சுமி நாராயண பெருமாள், விநாயகர், கருடாழ்வார், அனுமார், அய்யப்பன், விசேஷ அலங்கார திருமஞ்சனமும், அபிஷேகமும் நடந்தது.   தொடர்ந்து, மகா சாந்தி ஹோமம், திருமஞ்சன அபிஷேகம் முடிந்ததும், மூலவருக்கு அலங்காரம் அனுக்கிரகம் சாற்று முறை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !