செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் சைவப் பாட வகுப்புகள் துவக்கம்!
ADDED :3918 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசு நாயனார் உழவாரத்திருக்கூட்டம் சார்பில், சைவப் பாட வகுப்புகள் துவங்கின. கொடியேற்றம், இறைவணக்கத்துடன் துவங்கிய விழாவில் வெள்ளக்கோவில் ஞானாசிரியர் திருநாவுக்கரசு சைவ பாடத்தை துவக்கினார். வெள்ளக்கோவில் ஞானாசிரியர் சாமிநாதன் வாழ்த்துரை வழங்கினார். கோவை அருட்பணி மன்ற செயலாளர் குமரலிங்கம் சிறப்புரையாற்றினார். கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசர் திருமடம் நாச்சியப்பன் வரவேற்றார். இரண்டு ஆண்டுகள் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு அன்று மட்டும் வகுப்புகள் நடத்தப்படும்.