உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவ ஜோதிர்லிங்க சிறப்பு சுற்றுலா ரயில்

நவ ஜோதிர்லிங்க சிறப்பு சுற்றுலா ரயில்

ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிகுமார் கூறியதாவது: வரும் பிப்., 14ம் தேதி, மதுரையில் புறப்பட்டு சென்னை வழியாக, மகாகாலேஸ்வரர், ஓம்காரேஸ்வர், சோம்நாத், பீம்சங்கர், திரையம்பகேஸ்வர், கிரிஷ்னேஸ்வர், அயுந்த் நாக்நாத், பார்லி வைத்யநாத், ஆந்திராவின் மல்லிகார்ஜுன சுவாமி (ஸ்ரீசைலம்) ஆகிய நவஜோதிர் லிங்கத்தை தரிசனம் செய்யும் வகையில், 14 நாள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணம், 12,740 ரூபாயில் இருந்து துவங்குகிறது. பிப்., 5ம் தேதி, மதுரையில் புறப்பட்டு சென்னை வழியாக, சீரடி, மந்த்ராலயம், பண்டரிபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று வரும் வகையில், ஏழு நாட்களுக்கான குரு கிருப யாத்திரை சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கான கட்டணம், 6,370 ரூபாயில் இருந்து துவங்குகிறது. ஓட்டலில் தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி, உணவு, சுற்றுலா தகவலர் ஆகியவை, கட்டணத்திற்குள் அடங்கும். தகவல்களுக்கு, 98409 02916 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !