உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுமலை துண்டு கருப்பராயர் கோவில் திருவிழா

நடுமலை துண்டு கருப்பராயர் கோவில் திருவிழா

வால்பாறை : நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் 132ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் வடக்குப்பிரிவு. இங்குள்ள துண்டுகருப்பராயர் சுவாமி, மகாமுனீஸ்வரர், உச்சிகாளியம்மன் கோவில், வால்பாறை மலைப்பகுதியிலேயே மிகவும் பழமை வாய்ந்ததாகும்.இந்த கோவிலுக்கு வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்தும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். வால்பாறையில், பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் 132 ம் ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை எஸ்டேட் மேலாளர் ஏற்றினார். விழாவில் வரும் 25ம் தேதி மாலை நடுமலை தெற்கு பிரட்டிலிருந்து துண்டுக்கருப்பராயர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி கோவிலை சென்றடைகிறார். வரும் 26ம் தேதி பொங்கல் வைக்கும் விழாவும், தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகளும் செய்யப்படுகிறது. மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !