லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கும்பாபிேஷக விழா
பொள்ளாச்சி : கிணத்துக்கடவு கோப்பனுார்புதுார் (செட்டிபுதுார்) விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கும்பாபிேஷக விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. கோப்பனுார்புதுாரில் உள்ள விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிேஷக விழா வரும் 26ல் நடக்கிறது. விழாவையொட்டி, வரும் 23ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்ச கவ்யம், கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், மாலை 4:30 மணிக்கு மங்கள இசை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும் நடக்கிறது. 24ம் தேதி காலை 8:30 மணிக்கு சுதர்சன ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், தன பூஜையும், மாலை 4:30 மணிக்கு முதற்கால யாக பூஜையும், 25ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, காலை 11:00 மணிக்கு புதிய மூர்த்திகளுக்கு கண்திறத்தல், விமான கலசம் வைத்தல் உள்ளிட்ட பூஜைகளும், மதியம் 2:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, இரவு 9:00 மணிக்குமேல், மூல மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 9:30 மணி முதல் 9:45 மணிக்குள் விமான கும்பாபிேஷகம், காலை 9:45 மணிக்கு மேல் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிேஷகமும், அன்னதானம், மாலை 4:30 மணிக்கு தசதானம், தசதரிசனம், மகாபிேஷகம், அலங்கார பூஜையும் நடக்கிறது.