உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்தையில் அமாவாசை உற்சவம்

அனுமந்தையில் அமாவாசை உற்சவம்

மரக்காணம்: அனுமந்தை அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுமந்தை அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை ஒட்டி காலை 9 மணிக்கு விநாயகர், முருகர், பாவாடைராயன், நவகிரகங்கள், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு பிரார்த்தனை, இரவு 7 மணிக்கு அன்னதானம் நடந்தது. 12 மணியளவில் தீச்சட்டி ஏந்துதல் மற்றும் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளித்தார். கோவில் தர்மகர்த்தா சின்னசாமி, ஊராட்சி தலைவர் கலைவாணி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்தியா ரவிவர்மன் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !