உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசா பிரம்மா கோவிலில் சிறப்பு பூஜை

கைலாசா பிரம்மா கோவிலில் சிறப்பு பூஜை

திருத்தணி: தை அமாவாசையை முன்னிட்டு, கைலாசா பிரம்மா கோவிலில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி அடுத்த, கே.வி.என். கண்டிகையில், கைலாசா பிரம்மா கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, தை அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு, ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !