அழகர்கோவில் நூபுரகங்கையில் பக்தர்கள் புனித நீராடல்
ADDED :3970 days ago
அழகர்கோவில் : தை அமாவாசையை முன்னிட்டு அழகர்கோவில் நுாபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடினர். நீராட ஏராளமான பக்தர்கள் அதிகாலையே குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதையை அதிகாலையே திறந்து, பஸ் போக்குவரத்தை கோயில் நிர்வாகம் இயக்கியது. தீர்த்தத் தொட்டி மேல் உள்ள ராக்காயி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் வரிசையில் நின்று நீராடி அம்மனை தரிசித்தனர்.மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் மூலவர் முருகன், வள்ளி தெய்வானைக்கு வெள்ளி கவசம், உற்சவருக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரங்கள் நடந்தன. பகலில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.