உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் தீச்செட்டி ஏந்தி ஊர்வலம்!

அங்காளம்மன் கோவிலில் தீச்செட்டி ஏந்தி ஊர்வலம்!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை செட்டி தெருவிலுள்ள அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசையொட்டி பக்தர்கள் தீச்செட்டி ஏந்தி கோவிலுக்குள் வலம் வந்தனர். உளுந்தூர்பேட்டை செட்டி தெருவிலுள்ள அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.,முன்னாள் நகர செயலாளர் செல்லையா செய்திருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகளும், பக்தர்கள் தீச்செட்டி ஏந்தி கோவிலுக்குள் வலம் வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோவிலுக்குள் வலம் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !