தை அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை!
ADDED :3911 days ago
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ஸ்ரீ ராம அனுமன் கோவிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை மற்றும் இசை கச்சேரி நடந் தது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூரில் உள்ள ஸ்ரீ ராம அனுமன் கோவிலில் தை அமாவாசையையொட்டி ஆஞ்சநேருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு புவனகிரி விஷ்னுபிரியா, ஸ்ரீராம் ஆகியோரின் இசை கச்சேரி நடந்தது. விவசாய சங்கத் தலைவர் விஜயகுமார், உத்திராபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீராம அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளை தலைவர் சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார்.