திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தேரோட்டம்!
ADDED :3911 days ago
திருவள்ளூர்: வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, இன்று தேரோட்டம் நடக்கிறது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவம் கடந்த, 16ம் தேதி துவங்கியது. தினசரி, உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று காலை, சூர்ணாபிஷேகம், வெள்ளி சப்பரம், இரவு யானை வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை, 7:30 மணிக்கு நடக்கிறது. இதற்காக, அதிகாலை, 5:00 மணிக்கு உற்சவர் தேருக்கு எழுந்தருள்கிறார். இரவு, 10:30 மணிக்கு தேரில் இருந்து, மீண்டும் கோவிலுக்கு திரும்புகிறார். நாளை, திருப்பாதம் சாடி திருமஞ்சனம் நடக்க உள்ளது.