உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் கலெக்டர் ஆய்வு!

வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் கலெக்டர் ஆய்வு!

திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி கலெக்டர் சுரேஷ்  குமார் ஆய்வு செய்தார். திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் புனரமைக்கப்பட்டு வரும் 26ம் தேதி கும்பாபிஷேகம்  நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, கலெக்டர் சுரேஷ்குமார்  திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆய்வு  செய்தார். அப்போது எம்.பி.,க்கள் கடலூர் அருண்மொழிதேவன், சிதம்பரம் சந்திரகாசி, மங்களூர் ஒன்றிய சேர்மன் கந்தசாமி, திட்டக்குடி பேரூராட்சி  சேர்மன் நீதிமன்னன் மற்றும் திருப்பணிக்குழுவினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !