விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தூய்மை இந்தியா திட்டம்!
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணி நடந்தது. ஜூனியர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி.,) சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.இ.ஓ., தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கிரு ஷ்ணகுமார், தலைமை ஆசிரியர்கள் சேகர், ராஜேந்திரன், பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வீரராகவன் வரவேற்றார். ஆர்.டி.ஓ., செந்தில்குமார் துவக்கி வைத்தார். சுப்ரீம் அரிமா நிர்வாகிகள் சுரேஷ், சக்திவேல், தேவநாதன், தனசேகர், ஒருங்கிணைப்பாளர் ந÷ ரஷ்குமார், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். விருத்தாசலம் அரசு ஆண்கள், பெண்கள், தீவளூர் ஆதிதிராவிடர் நல மற்றும் நல்லூர் அரசு மேல் நிலைப் பள்ளிகள், புதுக்கூரைப்பேட்டை, தொரவளூர் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மங்கலம்பேட்டை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியைச் ÷ சர்ந்த ஜே.ஆர்.சி., மாணவர்கள் தூய்மை பணியில் பங்கேற்றனர். ஜே.ஆர்.சி., மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.