கானுõர் கிராமத்தில் திருவிளக்கு பூஜை!
ADDED :3911 days ago
கம்மாபுரம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுõர் செல்லியம்மன் கோவிலில், பழனி பாதயாத்திரை வழிபாடு மன்றம் சார்பில், திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் (20ம் தேதி) காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9:00 மணிக்கு முருகனுக்கு 108 அர்ச்சனை, வேல் அ பிஷேகம், பக்தர்கள் பஜனை, விசேஷ தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, தை அமவாசையையொட்டி அபிராமி பட்டருக்கு, அபிராமி பவுர்ணமிய õக அருள் தந்த கதைப் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. மாலை 3:00 மணிக்கு செல்லியம்மன் மூலவருக்கு அபிஷேக ஆராதனை, சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 5:00 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்குமரன் பாதயாத்திரைக் குழு முருக பக்தர்கள் செய்திருந்தனர்.