கிருஷ்ணகிரியில் கோவில் கட்ட பூஜை
ADDED :3909 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், வரும், 26ம் தேதி வள்ளி தெய்வானை சமேத முருகர் கோவில் கட்ட பூமி பூஜை நடக்கவுள்ளது. கிருஷ்ணகிரி வீட்டுவசதி வாரியம் பகுதி-2ல் அமைந்துள்ள, வினைதீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக, நான்காம் ஆண்டு நிறைவு விழா மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகர் கோவில் கட்ட பூமி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் வரும், 26ம் தேதி காலை, 10.30 மணிக்கு நடக்கவுள்ளது. தீர்த்தமலை நாராயணயோகி தலைமையில், பண்ருட்டி திருவதிகை ரவி ஸ்தபதி முன்னிலையில், சென்னை பிரம்மஸ்ரீ முத்துகணபதி சாஸ்திரிகள் மற்றும் ஆலய அர்ச்சகர் முரளிதரன் ஆகியோரால் பூமி பூஜை நடத்தப்படவுள்ளது. அன்று காலை, 5 மணி முதல் 6 மணிக்குள் கலசஸ்தாபனம், பின்னர் கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனையும் நடைபெறும்.