கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பாலஸ்தாபனம்
ADDED :3909 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய இருப்பதையொட்டி பாலஸ்தாபனம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமால் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய திருப்பணிகள் துவங்க உள்ளது. அதற்காக பால ஸ்தாபன வைபவம் நேற்று காலை திருக்கோவிலூர் ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. விஸ்வரூப தரிசனத்திற்கு பின் கலச பூஜைகளை நடத்தி யாகம் வளர்க்கப்பட்டது. ராஜகோபுரம் மற்றும் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள நான்கு கோபுரங்கள், ஆண்டாள், புண்டரீக வல்லி தாயார், சக்கரத்தாழ்வார், ஆழ்வாராதிகள் தெய்வங்களுக்கு பாலஸ்தாபனம் செய்தனர். அறநிலையத்துறை செயல் அலுவலர் பழனியம்மாள், ஆய்வாளர் தமிழரசி உட்பட பலர் பங்கேற்றனர்.