மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா துவக்கம்!
https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_39191_102802664.jpgமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா துவக்கம்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_39191_102808812.jpgமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா துவக்கம்!மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 23ம் தேதி காலை 10.05 மணியளவில் தெப்பத்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இரவு 7 மணியளவில் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும், கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவ விழா பிப்ரவரி 3ம் தேதி நடைபெருகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தெப்பத்திருவிழா அன்று அதிகாலையில் கோவிலில் இருந்து மீனாட்சி- சுந்தரேசுவரர் மாரியம்மன் தெப்பக்குளம் சென்று அங்கு தெப்பம் உற்சவம் நடைபெற்று இரவு கோவிலுக்கு வந்து சேரும் வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.