லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் மகா சிரவண தீபம்!
ADDED :3976 days ago
விழுப்புரம்: ப.வில்லியனுõர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் மகா சிரவண தீபம் ஏற்றப்பட்டது. விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுõர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் மகா சிரவண தீபம் ஏற்றும் விழா நடந்தது. காலையில் உற்வசர் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட கம்பத்தில் எழுந்தருளினார். மாலையில் கருட கம்பத்தில் மகா சிரவண தீபம் ஏற்றப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.