உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை ஏழு கோயில்களில் கும்பாபிஷேகம்!

அருப்புக்கோட்டை ஏழு கோயில்களில் கும்பாபிஷேகம்!

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகரம் சாலியர் மகாசன பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட ஏழு கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.  நேற்று காலை 3 மணி முதல் காலை 10.30 மணி வரை, மாகாளியம்மன் கோயில், சிவன் விநாயகர் கோயில், தெப்பக்குளம் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில், மோதக விநாயகர் கோயில், சஞ்சீவி விநாயகர் கோயில், பழனியாண்டவர் கோயில், பிரம்ம ஸ்ரீ அய்யா கோயில் ஆகிய 7 கோயில்களின் கோபுர கலசங்களுக்கும், அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது.  சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகளும் நடந்தது. பாவடி தோப்பு வளாகத்தில் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு தேரோடும் வீதியில் அம்மன் திருவீதி உலா வந்தார். வைகைச்செல்வன்,எம்.எல்.ஏ., தொழில் அதிபர்கள் தினகரன், வரதராஜன், நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், நகராட்சி கமிஷனர் மணி, கோபால், ஊராட்சி ஒன்றிய தலைவர் யோகவாசுதேவன் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை உறவின் முறை தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், துணை தலைவர் தர்மராஜன், பொருளாளர் நெடுஞ்செழியன், செயலர் பொறுப்பு ரமேஷ்பாபு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !