உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடியநல்லூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம்!

குடியநல்லூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம்!

தியாகதுருகம்: குடியநல்லூர் கிராமத்தில் சிவன், பெருமாள், செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  நடந்தது. விழுப்புரம் மாவட்டம் தியாகதுரு கம் அடுத்த குடியநல்லூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான காமாட்சியம்மன் உடனுறை கயிலாயநாதர், நிலமகள், திருமகள் உடனுறை  வரதராஜபெருமாள், பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது.  பக்தர்கள் முயற்சியால் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. ÷ காவில் வளாகத்தில் 15 அடி உயர ஆஞ்சனேயர் சிலை அமைத்தனர். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 20 ம் தேதி கணபதி பூஜையுடன் துவ ங்கியது. வேள்வி பூஜைகளுடன் ஆராதனைகள் செய்தனர். நேற்று முன் தினம் காலை 7.30 மணிக்கு ஏரிக்கரையில் அமைந்துள்ள பிடாரி செல்லிய ம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. பின்,  9.30 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. கோவை  மணிவாசகர் அ ருட் பணி மன்ற செயலாளர் குமரலிங்கம் தலைமையில், கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசர் திருமட அடியார் நாச்சியப்பன், பரம்பரை தர்மகர்த்தா  விசாலாட்சியம்மாள் முன்னிலையில் கயிலாயநாதர், வரதராஜ பெருமாள் கோவில் மூலவர் விமான கலசத்தில் 10 மணிக்கு புனித நீர் ஊற்றினர்.  நின்னையூர் கூட்டுறவு சங்க செயலாளர் ஜெகதீசன், ஊராட்சி தலைவர் மணிவேல், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வராஜ், பாலகிருஷ்ணன்,  துணைத் தலைவர் மல்லிகாஜெயவேல், வார்டு உறுப்பினர் கருணாநிதி, தெய்வீகன், சுப்ரமணியன், சம்பத், மாரிமுத்து உட்பட பலர்  கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !