உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாளையத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

பாளையத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

ஸ்ரீமுஷ்ணம்:  ஸ்ரீமுஷ்ணம் திருப்பாணாழ்வார் தெருவில் உள்ள  ஸ்ரீ மத் பாளையத்து மாரியம்மன், பால விநாயகர், பாலமுருகன் கோவில்  மகா  கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 22ம் தேதி மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம்,  அங்குரார்ப்பணம்  ரக்ஷாபந்தனம் முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று 23ம் தேதி காலை கோ பூஜை, இரண்டாம் கால பூஜையைத்  தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.  கும்பாபிஷேகத்தை ரவிசுந்தர் சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை திருப்பானாழ்வார் தெரு நாட்டாண்மைகள், முக்கியஸ்தர்கள் செய்தி ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !