உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பாளுக்கு வெற்றிலை!

அம்பாளுக்கு வெற்றிலை!

வெற்றிலை, பாக்கை தாம்பூலம் என்பர். அம்பிகைக்கு வெற்றிலை மீது அலாதி பிரியம். லலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு தாம்பூலப் பிரியா என்ற பெயர் இருக்கிறது. அம்பிகைக்கு வெறும் வெற்றிலை, பாக்கு மட்டுமின்றி குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் ஆகிய நறுமணப் பொருட்களையும் சேர்த்தால் நல்லது என சக்தி வழிபாட்டை விளக்கும் வித்யா உபாசனை நுõல் குறிப்பிடுகிறது. எல்லாம் கிருஷ்ண மயம் என்பதைச் சொல்ல வந்த நம்மாழ்வார், உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்று வெற்றிலையைக் கண்ணனாகவே பார்க்கிறார். வெற்றிக்கும், வெற்றிலை மாலைக்கும் உள்ள தொடர்பை ஆஞ்சநேயரின் கதை விளக்குகிறது. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தும் வழக்கம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !