திருப்பதி கூட்ட ரகசியம்!
திருப்பதியில் சேஷாத்ரி, கருடாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, வேங்கடாத்ரி என்னும் ஏழு மலைகள் இருக்கின்றன. சீனிவாசப்பெருமாள் ஏழாவது மலையான வேங்கடாத்ரியில் குடி கொண்டிருக்கிறார். வேங்கடாத்ரி என்றால் பாவத்தைப் பொசுக்கும் மலை. ஆதிசேஷனே என்ற பாம்பின் மீது பெருமாள் பள்ளி கொண்டிருப்பார் என்பர். அந்த பாம்பு தான், ஏழுமலைகளாக சுருண்டு கிடப்பதாக திருப்பதி தலபுராணம் கூறுகிறது. மலையின் உட்பகுதியில் விஷ்ணுவின் சக்கரம் போன்ற வட்டமான ரேகைகள் உள்ளன. திருமாலின் சாந்நித்யம் நிறைந்திருப்பதால் தான், இந்த மலை பக்தர்களை கவர்ந்துஇழுக்கும் சக்தி கொண்டதாக திகழ்கிறது. இதனால், இங்கு எப்போதும் கூட்டமாக இருக்கிறது. இதன் புனிதம் கருதிராமானுஜர் மலை மீது பாதம் வைக்க அஞ்சி, வெங்கடாஜலபதியை தரிசிக்காமலே இருந்தார். பின் முழங்காலிட்டு மலைஏறி ஏழுமலையானை தரிசித்தார்.