தேன்கிண்ணம்!
ADDED :4309 days ago
வேதத்தில் இசை மயமாக விளங்குவது சாம வேதம்.வியாசர் மூலம் உபதேசம் பெற்ற ஜைமினி என்ற முனிவர் இதை உலகில் பரப்பினார். பகவத் கீதையில் கிருஷ்ணர், வேதங்களில் நான் சாமவேதம் என்கிறார். கடவுள் என்றால் அதுநாராயணரே என்றும், அவருக்குஉரிய எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய (ஓம் என்பது ஒரே எழுத்து) என ஜெபித்தால் எல்லா நன்மையும் பெற்று இறுதியில் சொர்க்கத்தைப் பெறமுடியும் என விளக்குகிறது. தேன் போன்ற இசையும், அதை நிரப்பியிருக்கும் கிண்ணம் போல வேதப்பாடல்களும் இருப்பதால் சாமவேதத்தை தேன்கிண்ணம் என்று சிறப்பிப்பர்.